பதும் நிசங்கா அரைசதம்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 143 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தில்லி கேபிடல்ஸ் முதலில் விளையாடியது.
Advertisement
Advertisement
பதும் நிசங்கா அரைசதம்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 143 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்துள்ளது.
தில்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அதிகபட்சமாக 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அஷுத்தோஷ் சர்மா 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கே.எல்.ராகுல் 23 ரன்களும், கேப்டன் அக்ஷர் படேல் 11 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கார்த்திக் தியாகி மற்றும் அனுகுல் ராய் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வைபவ் அரோரா, சுனில் நரைன் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது.
In the IPL match against the Kolkata Knight Riders, the Delhi Capitals, batting first, scored 142 runs for the loss of 8 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.