முகப்பு
கிரிக்கெட்

நியூசி.க்கு எதிரான டெஸ்ட்: 3 அறிமுக வீரர்களுடன் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து வீரர்கள் குறித்து...

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். - படம்: ஐசிசி
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் மூன்று அறிமுக வீரர்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் தொடங்கவிருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025- 2027 சீசனுக்கான டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி நியூசிலாந்துடன் மோதுகிறது. முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் ஜூன் 4ஆம் தேதி தொடங்குகிறது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் டாப் ஆர்டர் பேட்டர் எமிலியோ கே, வேகப் பந்துவீச்சாளர் சோனி பேக்கர், விக்கெட் கீப்பர் பேட்டர் ஜேம்ஸ் ரீவ் அறிமுகமாகுகிறார்கள். இவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் 15 பேர் கொண்ட அணியில் தேர்வாகியுள்ளார்கள்.

முதல் டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹ்மான் அகமது, கஸ் அட்கின்சன், சோனி பேக்கர், சொயிஃப் பஷீர், ஜேக்கப் பெத்தல், ஹாரி புரூக், பென் டக்கெட், மேத்திவ் ஃபிஷர், எமிலியோ கே, ஜேம்ஸ் ரீவ், ஆலி ராபின்சன், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்.

தற்போதைக்கு இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தில் இருக்கிறது. அதனால், இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து ஆடவர் தேசிய அணிக்கான தேர்வுக்குழுத் தலைவராக ஆஸ்திரேலியாவின் மார்கஸ் நார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

summary

England name uncapped trio for first New Zealand Test

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments