மும்பையின் புதிய கேப்டன் நியமனத்தால் அதிகரிக்கும் வதந்திகள்..! ஹார்திக் பாண்டியா நிலைமை என்ன?
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா குறித்து...
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா சமீபத்திய போட்டிகளில் விளையாடாதது பேசுபொருளாக மாறியுள்ளது.
கடைசி ஆட்டத்தில் ஜஸ்ப்ரீத் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டதால் ஹார்திக் பாண்டியா புறக்கணிக்கப்படுகிறார் என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளன.
ஹார்திக் பாண்டியா குஜ்ராத் டைட்டன்ஸ் அணியை 2 சீசன்களில் வழிநடத்தி ஒரு கோப்பை, ஒரு ரன்னர் - அப் என மிகச்சிறப்பாக செயல்பட்டார். 2023 முதல் மும்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
ஹார்திக் தலைமையில் கடந்த சீசன் மட்டுமே மும்பை அணி பிளே ஆஃப் சென்றது. மற்ற இரண்டு சீசன்களில் மோசமாக விளையாடியது. நடப்பு சீசனில் தொடரிலிருந்து வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.
ஹார்திக் பாண்டியா தனியாக மும்பையில் பயிற்சி எடுக்க, அந்த அணி அவர் இல்லாமலேயே மற்ற போட்டிகளில் விளையாடிவருகிறது. ஷர்துல் தாக்குர், “ஹார்திக் காயத்தில் இருக்கிறார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார்” எனக் கூறியிருந்தார்.
முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சுரேக்கர், “மும்பை அணி ஹார்திக் பாண்டியாவை தாண்டி சிந்திக்க ஆரம்பித்து விட்டது. பும்ரா அளவுக்கு யாரும் போட்டியை நன்றாக கணிப்பவர்கள் யாருமில்லை. அதனால், அவருக்கு வாய்ப்பு தருவதுதான் நல்லது” எனக் கூறியுள்ளார்.
இந்த சீசனுடன் ஹார்திக் பாண்டியா மும்பை அணியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Mumbai Indians Given New Captaincy Candidate As Hardik Pandya Rumours Intensify
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.