கிளாசன், இஷான் கிஷன் அதிரடி: சிஎஸ்கே தோல்வி!
நடப்பு ஐபிஎல் தொடரின் 63ஆவது போட்டி குறித்து...
சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுற்றது. இதனால், சிஎஸ்கே அணிக்கு பிளே-ஆஃப் வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 63ஆவது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து, முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 180/7 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 44 ரன்களும், கார்த்திக் சர்மா 32 ரன்களையும் எடுத்தனர்.
Advertisement
Advertisement
ஹைதராபாத் அணியில் சிறப்பாக பந்து வீசிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், சகிப் ஹுசைன் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 19 ஓவர்களில் 181/5 ரன்கள் எடுத்து வென்றது. இதில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 70 ரன்களும், கிளாசன் 47 ரன்களும் எடுத்தார்கள். சிஎஸ்கே சார்பில் முகேஷ் சௌதரி 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலமாக சன்ரைசர்ஸ், குஜராத் அணிகள் பிளே ஆஃப்ஸுக்குத் தேர்வாகியுள்ளன. ஏற்கெனவே ஆர்சிபி தேர்வாகியுள்ளது.
Heinrich Klaasen, Ishan Kishan on the Rampage: CSK Defeated!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.