வித்தியாசமான கொண்டாட்டத்துக்குக் காரணம் அம்மாதான்... மனம் திறந்த சூர்யவன்ஷி!
ஆட்ட நாயகன் விருது வென்ற 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டி குறித்து...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கிய வெற்றியைப் பெற்றுத்தந்த 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆட்ட நாயகன் விருது வென்றார். தனது வித்தியாசமான கொண்டாட்டத்துக்குக் காரணம் அம்மாதான் எனக் கூறியுள்ளார்.
நேற்றிரவு நடந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ அணி 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 10 சிக்ஸா்களுடன் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதில் அரைசதம் அடித்தபோது கைகளில் ஏ போன்று வித்தியாசமாகக் கொண்டாடினார்.
Advertisement
Advertisement
ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு, இது குறித்து வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் விடியோவில் கூறியிருப்பதாவது:
இந்த மாதிரியான விஷயங்கள் எல்லாம் தனிப்பட்டவை. வருங்காலத்திலும் இதைத் தொடர்வேன். உண்மையில் இது எனது அம்மாவுக்காக செய்தது. எனது அம்மாவின் முதல் எழுத்து ’ஏ’வில் (ஆங்கிலத்தில்) தொடங்குகிறது. இதைச் சொல்லாமல் தொடரால் என்றிருந்தேன் தற்போது சொல்லும்படி ஆகிவிட்டது என்றார்.
"My mother is the reason behind this celebration..." — Suryavanshi opens up!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.