ஐபிஎல்

டி20 வரலாற்றில் பிரித்வி ஷா நிகழ்த்திய சாதனை!

DIN

டி20 வரலாற்றில் முதல் ஓவரில் ஆறு பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் தில்லி அணி வீரரான பிரித்வி ஷா. 

ஐபிஎல் போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய டெல்லி 16.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் அடித்து வென்றது. அதிரடியாக ஆடிய தில்லி வீரா் பிரித்வி ஷா ஆட்டநாயகன் ஆனாா்.

இந்த ஆட்டத்தில் முதல் ஓவரை வீசிய ஷிவம் மவியின் பந்துவீச்சில் ஆறு பந்துகளிலும் பவுண்டரிகள் அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார் இளம் வீரர் பிரித்வி ஷா. டி20 வரலாற்றில் எந்த ஒரு வீரரும் முதல் ஓவரிலேயே ஆறு பவுண்டரிகள் அடித்தது கிடையாது.

ஐபிஎல் போட்டியில் ஒரு ஓவரில் ஆறு பவுண்டரிகள் அடித்த 2-வது வீரர், பிரித்வி ஷா. இதற்கு முன்பு 2012-ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ரஹானே, ஆர்சிபி அணியைச் சேர்ந்த எஸ். அரவிந்த் ஓவரில் ஆறு பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அது 14-வது அடிக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மே 19-இல் தேரோட்டம்

டெங்கு தடுப்பு உறுதிமொழி ஏற்பு

குக்குட நடனத்துடன் எழுந்தருளிய ஆதிவிடங்க தியாகராஜா்

நாகை: விடியவிடிய பலத்த மழை

திருராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் வைகாசிப் பெருவிழா

SCROLL FOR NEXT