ஐபிஎல்-2019

ஐபிஎல்-லில் தொடக்கத்திலிருந்தே விளையாடவுள்ள ஸ்மித் & வார்னர்!

எழில்

கடந்த 2018 பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை உப்பு காகிதம் கொண்டு சேதப்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் ஆட ஓராண்டும், பேட்ஸ்மேன் பேன்கிராப்டுக்கு 9 மாதங்களும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பேன்கிராப்ட் மீதான தடை ஏற்கெனவே நீங்கி விட்டது. தொடர்ந்து டி20 லீக் ஆட்டங்களில் ஆட மூவருக்கும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி அளித்தது. மேலும் ஸ்மித், வார்னர் இருவரும் முழங்கையில் காயம்பட்டதால் ஆடாமல் இருந்தனர்.

இருவரது தடைக்காலமும் மார்ச் 28 உடன் நிறைவடைகிறது. எனினும் மார்ச் 23 முதல் ஆரம்பிக்கவுள்ள ஐபிஎல் போட்டியில் இருவரும் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருட இடைக்காலத் தடை என்பது சர்வதேசப் போட்டிகளுக்கு மட்டும்தான். கடந்த வருடம் இருவருக்கும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இருவரும் - ஸ்மித் ராஜஸ்தானுக்காகவும் வார்னர் ஹைதராபாத்துக்காகவும் இந்த வருட ஐபிஎல் போட்டியில் களமிறங்கவுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT