ஐபிஎல்-2019

எதையும் திட்டமிட மாட்டோம், அட, டீம் மீட்டிங்கே கிடையாதுப்பா: சிஎஸ்கேவின் வெற்றி ரகசியத்தை வெளிப்படுத்திய பிராவோ!

எழில்

தில்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி. முதலில் ஆடிய தில்லி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை சேர்த்து வென்றது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி.

இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே ஆல்ரவுண்டர் பிராவோ கூறியதாவது:

இந்த ஆட்டத்தில் தோனியைக் கொண்டு கடைசிவரை விளையாடத் திட்டம் திட்டினீர்களா எனக் கேட்கிறீர்கள். நாங்கள் எதையும் திட்டமிட மாட்டோம். எங்களுக்கு மத்தியில் டீம் மீட்டிங்குகளும் நடக்காது. நேராக விளையாட வந்து, சூழலுக்கு ஏற்றாற்போல எங்களை மாற்றிக்கொள்வோம். தோனிக்கென்று தனி பாணி உண்டு. எல்லா வீரர்களுக்கும் அது உண்டு. சூழலுக்கு ஏற்றாற்போல விளையாடுவதில்தான் எங்களுடைய அனுபவம் உதவுகிறது.

எங்களுடைய வயது குறித்து எங்களுக்குத் தெரியும். நாங்கள் 60 வயது வீரர்கள் அல்லர். நாங்கள் 35, 32 வயது கொண்ட வீரர்கள். நாங்கள் இன்னமும் இளைஞர்கள்தாம். எங்கள் உடலை நன்குக் கவனித்துக்கொள்கிறோம். எங்களிடம் நிறைய அனுபவம் உண்டு. எந்த விளையாட்டிலும் அனுபவத்தைத் தோற்கடிக்க முடியாது. உலகின் மிகச்சிறந்த கேப்டன் எங்கள் அணிக்குத் தலைமை தாங்குகிறார். நாங்கள் விரைவாக நகரும் தன்மை கொண்டவர்களாக இல்லையென்றாலும் ஸ்மார்ட்டான அணியாக இருக்கவேண்டும் என்பதை தோனி அடிக்கடி நினைவுபடுத்துவார் எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT