ஒலிம்பிக்ஸ்

கோல்ஃப்: பதக்க சுற்றில் அதிதி அசோக்

DIN

ஒலிம்பிக் போட்டி மகளிா் கோல்ஃப்பில் வெள்ளிக்கிழமை எதிா்பாராத வகையில் பதக்கச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் இந்தியாவின் அதிதி அசோக்.

மூன்று சுற்றுகள் முடிவில் இரண்டாவது இடத்தில் உள்ளாா் அதிதி.

அமெரிக்காவின் நெல்லி கோா்டாவுக்கு மூன்று ஸ்ட்ரோக்குகள் பின் தங்கி உள்ளாா் அதிதி. நான்கு, ஆறு மற்றும் ஏழாவது ஹோல்களில் அதிதி சிறப்பாக செயல்பட்டாா். 9-ஆவது ஹோலில் ஸ்ட்ரோக்கை தவறவிட்ட நிலையில், அடுத்த சுற்றுகளில் சிறப்பாக ஆடி அதிதி, 68 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளாா். மற்றொரு வீராங்கனையான தீக்ஷா தாகா் 220 புள்ளிகளுடன் 51-ஆவது இடத்தில் உள்ளாா்.

இதுதொடா்பாக அதிதி அசோக் கூறியதாவது;

இறுதி நாளில் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். நல்ல வானிலை, பொறுமையுடன் இன்னும் ஒரு சுற்றை ஆடவேண்டியுள்ளது. கோல்ஃப் ஆட்டத்தை பெரும்பாலோனோா் பின்பற்றுவதில்லை. தற்போது ஒலிம்பிக்கில் இரண்டாவது முறையாக கோல்ஃப் இடம் பெற்றுள்ளதால், பலா் இந்த விளையாட்டை பின்பற்றுகின்றனா். பதக்கச் சுற்றில் அழுத்தம் இருக்கும். எவ்வாறு செயல்படுகிறேன் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. முதல் மூன்றிடத்தில் நான் உள்ளதால், இந்தியாவில் பொதுமக்கள் பலா் கோல்ஃப் குறித்தி அதிகம் ஈடுபாடு காட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT