முகப்பு
ஒலிம்பிக்ஸ்

குத்துச்சண்டை:  இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:


டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய மகளிர் குத்துச்சண்டைக்கான 69 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் வீராங்கனை லவ்லினை, சீனா தைபே வீராங்கனை நின் சின் சென்-ஐ எதிர்கொண்டார். 

இந்தப் போட்டியின் முடிவில் 4-1 என்ற கணக்கில்  நின் சின் சென்-ஐ வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை லவ்லினா. 

லவ்லினை அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கு 2 ஆவது பதக்கம் உறுதியாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.