முகப்பு
செய்திகள்

லார்ட்ஸ் பாரம்பரியத்தைத் தொடரும் ஈடன் கார்டன்ஸ்!

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, செப்டம்பர் 30-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.

Updated On : 27 செப்டம்பர் 2016, 3:10 pm IST
பகிர்:

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, செப்டம்பர் 30-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இது இந்திய அணி உள்நாட்டில் விளையாடுகிற 250-வது டெஸ்ட் போட்டி.

இதனையொட்டி சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள நடைமுறைபோல, ஈடன் கார்டன்ஸிலும் மணியடித்து போட்டி தொடங்க உள்ளது. 30-ம் தேதியன்று கபில் தேவ் மணியடித்து டெஸ்ட் போட்டியைத் தொடங்கிவைப்பார்.

இதற்காக ஈடன் கார்டன்ஸில் வெள்ளியால் பூசப்பட்ட பெரிய மணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. அதேபோல டாஸுக்கும் தங்க நாணயம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments