செய்திகள்

உலகமெல்லாம் சாதித்தாலும் இலங்கையில் தொடர்ந்து சொதப்பும் ரோஹித் சர்மா!

எழில்

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இந்த ஆட்டத்தில் இந்தியா 127 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது. இலங்கையின் தம்புல்லா நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்ய, இலங்கை அணி 43.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா 28.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஷிகர் தவன் 90 பந்துகளில் 132, கோலி 70 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷிகர் தவன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நேற்றைய ஆட்டத்தில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. உலகமெல்லாம் ரோஹித் சர்மா சாதித்துக் காட்டினாலும் இலங்கை மட்டும் அவருக்கு ராசியில்லாததாக உள்ளது.

இலங்கையில் விளையாடிய கடந்த 10 ஆட்டங்களில் அவர் எடுத்த ரன்கள்:

37 ரன்கள், சராசரி 3.70.

4
0
11
5
5
0
0
4
4
4

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-ஆவது ஆட்டம் வரும் வியாழக்கிழமை பல்லகெலேவில் நடைபெறுகிறது. அந்த ஆட்டத்திலிருந்தாவது ரோஹித் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனி காவலர் பாதுகாப்புக்காக அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் கைது

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT