சுனில் சேத்ரி, கமலாதேவிக்கு ஏஐஎப்எப் விருது
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎப்எப்) சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனைக்கான விருதுகளை சுனில் சேத்ரி, கமலா தேவி ஆகியோர் பெற்றனர்.
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎப்எப்) சிறந்த கால்பந்து வீரர், வீராங்கனைக்கான விருதுகளை சுனில் சேத்ரி, கமலா தேவி ஆகியோர் பெற்றனர்.
பிரபல வீரர் பாய்ச்சுங் பூட்டியாவுக்கு பின்னர் இந்திய அணிக்காக 100 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர் என்ற சிறப்பை சுனில் சேத்ரி பெற்றுள்ளார். மேலும் அவர் தற்போது பெங்களூரு எப்சி அணிக்காக விளையாடி வருகிறார். ஆண்கள் பிரிவில் சேத்ரியும், மகளிர் பிரிவில் கமலா தேவியும் 2017-ஆம் ஆண்டு சிறந்த வீரர், வீராங்கனைக்காக விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வளரும் வீரருக்கான விருது அனிருத் தபா, மகளிர் பிரிவில் பந்தோய் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த நடுவர்-சிர் கிருஷ்ணா, உதவி நடுவர்-சுமந்தா தத்தா, கால்பந்துக்கு சிறந்த ஊக்கம்-ஹீரோ மோட்டார்கார்ப்பரேஷன், சிறந்த கால்பந்து வளர்ச்சித் திட்டம்- கேரள மாநில கால்பந்து சங்கம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.