செய்திகள்

மகளிர் ஐபிஎல்-ஆ? முதலில் உள்ளூர் கிரிக்கெட்டை மேம்படுத்துவோம்: மிதாலி ராஜ் கருத்து!

எழில்

இந்திய மகளிர் அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் ஒருநாள் தொடரை 0-3 என முழுமையாக இழந்தது. இதையடுத்து நாளை முதல் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் கொண்ட முத்தரப்பு மகளிர் டி20 போட்டி நடைபெறவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நாளை மோதுகின்றன. 

இந்நிலையில் இந்தியாவில் மகளிருக்கு எனத் தனியாக ஐபிஎல் போட்டி தொடங்குவது குறித்து பிரபல இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் கூறியதாவது:

இந்தியாவில் திறமையான வீராங்கனைகள் நிறைய பேர் இருந்தால் மட்டுமே மகளிர் ஐபிஎல் நடத்துவது பொருத்தமாக இருக்கும். ஐபிஎல் போன்ற போட்டியில் விளையாட அதற்குரிய தகுதியான வீராங்கனைகளை நாம் கொண்டிருக்க வேண்டும். இந்திய ஏ மகளிர் அணிக்கே நமக்கு இன்னும் தரமான வீராங்கனைகள் தேவைப்படுகிறது. அத்தகைய வீராங்கனைகள் இருந்துவிட்டால் ஐபிஎல் போட்டியை மகளிருக்கெனத் தனியாக நடத்தலாம்.

உள்ளூர் வீராங்கனைச் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அப்போது சர்வதேச வீராங்கனைகளுக்கும் இந்திய வீராங்கனைகளுக்கும் உள்ள வேறுபாடு நன்குத் தெரியவரும். இது மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு எதிராகக்கூட முடியும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT