முகப்பு
செய்திகள்

சன்ரைசர்ஸில் இருந்து டேர் டெவில்ஸ் அணிக்கு இடம் பெயர்ந்தார் ஷிகர் தவன்

இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவன், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் இருந்து தில்லி டேர் டெவில்ஸ் அணிக்கு இடம் பெயர்ந்தார்.

Updated On : 6 நவம்பர் 2018, 12:57 am IST
பகிர்:


இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவன், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் இருந்து தில்லி டேர் டெவில்ஸ் அணிக்கு இடம் பெயர்ந்தார்.
ஐபிஎல் சீசன் 2019 வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் பல்வேறு அணிகள் தங்களை பலப்படுத்திக் கொள்ளும் வகையில் புதிதாக வீரர்களை வாங்குவது, பரிமாற்றிக் கொள்ளவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. ஷிகர் தவனை நிகழாண்டு தொடக்கத்தில் ரூ.5.2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது ஹைதராபாத் அணி. ஆனால் இதில் தனது விலை மதிப்பு தொடர்பாக தவனுக்கு விருப்பம் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனால் அவர் தில்லி அணிக்கு இடம் பெயர்ந்தார். அவருக்கு பதிலாக தில்லி அணி ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், சுழற்பந்துவீச்சாளர் ஷபாஸ் நதீம் ஆகியோரை ஹைதராபாத் அணிக்கு விடுவித்துள்ளது. கடந்த 2008-இல் ஐபிஎல் தொடக்க சீசனில் தில்லி அணி சார்பில் ஆடிய தவன், 10 ஆண்டுகள் கழித்து சொந்த நகரத்தில் விளையாடுகிறார்.
ஷிகர் தவன் வேறு அணிக்கு சென்றது பெரிய இழப்பாகும். எங்கள் அணிக்காக நீண்டகாலம் விளையாடிய அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். விலை நிர்ணயத்தில் அவருக்கு மகிழ்ச்சி இல்லை என்ற போதிலும், ஐபிஎல் விதிகள்படி எங்களால் அதை மாற்ற முடியாது என ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2013 முதல் ஹைதராபாத் அணியில் ஆடி வந்த தவன், 91 இன்னிங்ஸ்களில் 2768 ரன்களை விளாசி இருந்தார். 
அதே நேரத்தில் ஷிகர் தவன் இணைந்தது தங்கள் அணிக்கு கூடுதல் பலத்தையும் அனுபவத்தையும் வழங்கும் என தில்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments