இளையோர் (யூத்) ஒலிம்பிக்: தபாபி தேவிக்கு வெள்ளி
ஆர்ஜென்டீனாவில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டியில் ஜூடோவில் வெள்ளி வென்று இரண்டாவது பதக்கத்தை பெற்றார் தபாபி தேவி.
ஆர்ஜென்டீனாவில் நடைபெற்று வரும் யூத் ஒலிம்பிக் போட்டியில் ஜூடோவில் வெள்ளி வென்று இரண்டாவது பதக்கத்தை பெற்றார் தபாபி தேவி.
பியூனோஸ் அயர்ஸ் நகரில் 6-ஆம் தேதி யூத் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்தியா சார்பில் 13 விளையாட்டுகளில் 47 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மகளிர் ஜூடோ 44 கிலோ எடைப்பிரிவில் ஆசிய கேடட் சாம்பியன் தபாபி தேவியும், வெனிஸுலாவின் மரியா ஜிர்மன்ஸும் மோதினர். இதில் 11-0 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்த தபாபி தேவி வெள்ளி பதக்கம் வென்றார்.
யூத் ஒலிம்பிக்கில் ஜூடோவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கமாகும். துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் வெள்ளியை துஷார் மானே வென்றார்.
ஹாக்கியில் வெற்றி:
18 வயதுக்குட்பட்டோர் மகளிர் ஹாக்கியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வென்றது. லால்ரேமிசியாமி 2, சலீமி டேட், மும்தாஸ் கான் தலா 1 கோலை அடித்தனர். யூத் ஒலிம்பிக்கில் 20 நிமிடங்கள் கால அளவுடன் 5 வீரர்கள் முறையில் போட்டி நடக்கிறது.