முகப்பு
செய்திகள்

ஆசிய பாரா போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம்

ஆசிய பாரா போட்டிகளில் திங்கள்கிழமை மட்டும் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

Updated On : 8 அக்டோபர் 2018, 7:18 pm IST
புகைப்படம்: டிவிட்டர்
பகிர்:

ஆசிய பாரா போட்டிகளில் திங்கள்கிழமை மட்டும் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.  

ஆசிய பாரா போட்டி ஜகார்த்தலாவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று மட்டும் இந்தியா தங்கப்பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. 

ஈட்டி எறிதல்:

Advertisement

Advertisement

இதில், இந்தியாவின் சந்தீப் சௌதரி ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் 60.01மீ தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இவர் தனது 3-ஆவது வாய்ப்பில் இந்த தூரத்துக்கு ஈட்டியை எறிந்தார். இது நடப்பு ஆசிய பாரா போட்டியில் இந்தியா வெல்லும் முதல் தங்கப்பதக்கம் ஆகும். 

இலங்கை வீரர் 59.32மீ தூரத்துக்கும், ஈரான் வீரர் ஓமிதி அலி 58.97மீ தூரத்துக்கும் ஈட்டி எறிந்து முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர். 

நீச்சல்:

ஆடவர் பட்டர்ஃபிளை 50மீ பிரிவில் இந்தியாவின் ஜாதவ் சுயாஷ் நாராயண் தங்கப்பதக்கம் வென்றார். 

1500மீ ஓட்டம்:

1500மீ ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ரஜூ ரக்ஷிதா தங்கப்பதக்கம் வென்றார். 

இதுமட்டுமின்றி இன்று ஒரே நாளில் இந்தியா 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. 

திங்கள்கிழமை நிலவரப்படி 3 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கம் என 16 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 8-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.