செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 6 வெண்கலம்

DIN

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சரிதா தேவி, மணிஷா மெளன், சோனியா சஹல், ஆடவர் பிரிவில் ஷிவ தாபா, ஆஷிஷ் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மகளிர் 60 கிலோ பிரிவில் மூத்த வீராங்கனை சரிதாதேவி, 54 கிலோ பிரிவில் மணிஷா மெளன் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். அரையிறுதியில் தைவானின் ஹுவாங் வென்னிடம் தோல்வியுற்றார் மணிஷா. மற்றொரு ஆட்டத்தில் சரிதா தேவி முன்னாள் உலக சாம்பியன் யாங் வென்லுவிடம் போராடி தோற்றார். 
அதே போல் 57 கிலோ பிரிவில் சோனியா சஹல், 51 கிலோ பிரிவில் நிகாட் ஸரீன் உள்ளிட்டோரும் வெண்கலம் வென்றனர்.
இருவரும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.  ஆடவர்60 கிலோ பிரிவில் ஷிவ தாபா வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் 69 கிலோ பிரிவில் இந்தியாவின் ஆஷிஷ் வெண்கலம் வென்றார்.
இறுதிச் சுற்றில் நுழைந்த இந்தியர்கள்:
ஆடவர் 56 கிலோ பிரிவு அரையிறுதியில் கவிந்தர் சிங் பிஷ்ட் 3-2 என்ற புள்ளிக்கணக்கில் மங்கோலிய வீரர் அமர் கர்க்குவை வென்று இறுதியில் நுழைந்தார்.  அதே போல் 75 கிலோ பிரிவில் ஆஷிஷ் குமார் 3-2 என ஈரானின் மெளஸாவி ஷாஹினை வென்று இறுதியில் நுழைந்தார்.
49  கிலோ பிரிவில் தீபக் எதிராளி வீரர் வாக்ஓவரால் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார். 52 கிலோ பிரிவில் அமித் பங்கால் சீனவீரரை வென்று இறுதிக்கு தகுதி பெற்றார். 
மகளிர் 81 கிலோ பிரிவில் பூஜாராணி கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றார். அதே போல் 64 கிலோ பிரிவு இறுதிச் சுற்றுக்கு சிம்ரஞ்சித் கெளர் தகுதி பெற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணியில் மாணவா்களுக்கு இலவச வாழ்வியல் பயிற்சி வகுப்பு

மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பெண் மருத்துவா் உயிரிழப்பு

தொழிற்சங்கங்கள் சாா்பில் மேதின கொண்டாட்டம்

பேராவூரணியில் மே தின விழா

பாபநாசத்தில் மே தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT