முகப்பு
செய்திகள்

லீக் கோப்பை: மான்செஸ்டர் சிட்டி சாம்பியன்

இங்கிலாந்தின் லீக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிச் சுற்றில் மான்செஸ்டர் சிட்டி அணி கோப்பையை கைப்பற்றியது.

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:20 am IST
கோப்பையுடன் மான்செஸ்டர் சிட்டி அணியினர்.
பகிர்:


இங்கிலாந்தின் லீக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிச் சுற்றில் மான்செஸ்டர் சிட்டி அணி கோப்பையை கைப்பற்றியது.
செல்ஸி-சிட்டி அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் வெம்ப்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. 
இதில் ஆட்டத்தின் முடிவு வரை எந்த அணியும் கோலடிக்கவில்லை.
இதையடுத்து பெனால்டி முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று மான்செஸ்டர் சிட்டி அணி லீக் கோப்பையை கைப்பற்றியது. 
சிட்டி அணி இதை வெல்லுவது 5-ஆவது முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.