முகப்பு
செய்திகள்

இன்று அடிலெய்டில் 2-ஆவது ஒரு நாள் ஆட்டம்: சமன் செய்யுமா இந்தியா?

இந்திய-ஆஸி. அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் அடிலெய்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 15 ஜனவரி 2019, 1:09 am IST
தீவிர பயிற்சியில் தோனி, தினேஷ் கார்த்திக்.
பகிர்:

தோனியின் உடல்தகுதியால் அணி நிர்வாகம் கவலை
 

இந்திய-ஆஸி. அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் அடிலெய்டில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. தொடரை கைப்பற்ற இந்த ஆட்டத்தின் வெற்றி முக்கியம் என்பதால் இந்தியா போராடும் எனத் தெரிகிறது.
கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் ஆஸி. சுற்றுப்பயணத்தின் நிறைவாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் கடந்த 12-ஆம் தேதி சிட்னியில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஆஸி. 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதில் கோலி, தவன், ராயுடு உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால்ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதமடித்தும் வெல்ல முடியவில்லை. தோனி மிதமாக ஆடி 51 ரன்களை எடுத்தார்.
தோனி உடல்தகுதியால் கவலை
முன்னாள் கேப்டன் தோனி உடல்தகுதி இல்லாத நிலையில் உள்ளது அணி நிர்வாகத்துக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மீண்டும் மிடில் ஆர்டர் பலவீனமாக காட்சி தருகிறது. தோனியால் பந்துகளை சுழன்று அடிக்க முடியவில்லை. 
தற்போது அவர் 5-ஆம் நிலை பேட்ஸ்மேனாக களமிறக்கப்படுகிறார். அவரை 4-ஆம் இடத்தில் களமிறக்க வேண்டும் என துணை கேப்டன் ரோஹித் சர்மா ஏற்கெனவே கூறியிருந்தார். 
மிடில் ஆர்டர் பேட்டிங் பாதிப்பு
இந்நிலையில் தோனி ஆசிய கோப்பையில் ஆடிய போது சிறப்பாக ரன்களை குவித்தார். அவரது சராசரி 53.95 ஆக இருந்தது. ஆறாம் நிலையில் ஆடிய போது சராசரி ஆக இருந்தது. கடைசியாக ஆசிய கோப்பை போட்டியில் தோனி நான்காம் நிலையில் களமிறங்கினார்.மிடில் ஆர்டரில் அம்பதி ராயுடுவும் சரியாக ஆடவில்லை. மே.இ.தீவுகள் தொடரில் ராயுடு சிறப்பாக ஆடினார். ஆனால் தற்போது தடுமாறினார். 
பெண்கள் சர்ச்சை கருத்து தொடர்பாக ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவும் சஸ்பெண்ட் ஆகியுள்ளது மேலும் சிக்கலை கடுமையாக்கி உள்ளது. பாண்டியா இல்லாத போது மே.இ.தீவுகள் தொடரில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் ஆடினர். அது சொந்த மண்ணாக அமைந்திருந்தது. ஆனால் ஆஸி. நிலைமை வேறாகும். தற்போது சேர்க்கப்பட்டுள்ள தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இந்த நிலையை சீராக்குவாரா எனத்தெரியவில்லை.
ஷிகர் தவன், கோலி, ராயுடு உள்ளிட்டோர் தங்கள் வழக்கமான ஆட்டத்தை தொடருவார்கள், ரன்களை விளாசினால் மட்டுமே பேட்டிங் வலுவாகும். மிடில் ஆர்டர் மீது சுமையை சுமத்தாமல் விளாச வேண்டும்.
ஆறுதல் தரும் பெளலிங்
பேட்டிங் இத்தகையை சிக்கலான நிலையில் உள்ள நிலையில் பெளலிங் மட்டுமே ஆறுதலை தருவதாக உள்ளது. முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், ஆகியோர் முதல் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசினர். கலில் அகமது களமிறக்கப்படவில்லை.
இந்த ஆட்டத்தில் கலில் அகமதுவுக்கு வாய்ப்பு தரப்படலாம். அம்பதி ராயுடுவின் பெளலிங் முறை குறித்து ஐசிசி சந்தேகம் எழுப்பியுள்ளது. எனினும் அவர் பந்துவீச தடையில்லை. கேதர் ஜாதவும் பதிலி பெளலராக தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பார்.
ரவீந்திர ஜடேஜா வழக்கம் போல் அணியில் இடம் பெறுவார் எனத் தெரிகிறது.
கோலிக்கு ராசியான அடிலெய்ட்
அடிலெய்டில் விராட் கோலிக்கு ராசியான மைதானமாக உள்ளது. அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இங்கு அவரது சராசரி 73.44 ஆக உள்ளது. அதே நேரத்தில் ஒரு நாள் ஆட்டத்தில் 46.66 சராசரி உள்ளது. 
ஷிகர் தவன் முதல் ஆட்டத்தில் டக் அவுட்டானார். அவரது ஆட்டமும் கவலை தருகிறது. குறிப்பாக இந்திய வீரர்கள் டெஸ்ட் தொடரில் தீவிரமாக இருந்தபோது, தவன் முழு ஓய்வில் தான் இருந்தார்.
தோனி டெஸ்ட்டிலும், ராயுடு முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதனால் அவர்கள் ரஞ்சி கோப்பை ஆட்டங்களில் பங்கேற்கவில்லை. ஆனால் ஷிகர் தவன் உள்ளூர் போட்டிகளில் ஆடவில்லை. 
ஆஸி. அணி உற்சாகத்துடன் மீண்டும் களம் காணும். அவர்களுக்கு அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ஆட்டமே கவலை தருகிறது. முதல் ஆட்டத்தில் இடம் பெற்ற அணியே அடிலெய்ட் ஆட்டத்திலும் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக ஆடா விட்டால் பந்துவீசுவதில் சிக்கல்
வழக்கமாக ஆடாவிட்டால் அது பந்துவீசுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
ஆஸி.யில் நடைபெற்ற 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் புவனேஸ்வர் குமார் இடம் பெறவில்லை. டெஸ்ட் அணியில் இருந்தும், அவரை பிரதான அணியில் சேர்க்கவில்லை. இந்நிலையில் சிட்னியில் தொடங்கிய முதல் ஒரு நாள் ஆட்டத்தில் புவனேஸ்வர்குமார் பந்துவீசி 66 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
ஒரு மாதமாக ஆடாதது இதற்கு காரணமா என திங்கள்கிழமை செய்தியாளர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:
வழக்கமாக ஆடாமல் இருந்தால் பந்துவீச்சில் அதன் தாக்கம் தெரியும். ஆட்டத்தில் பந்துவீசுவது என்பது வேறு. வலைப்பயிற்சியிலும் சீராக பந்துவீச முயற்சி மேற்கொண்டுள்ளேன்.
ஒரு நாள் ஆட்டத்துக்காக மட்டுமே பந்துவீச தயாராக வில்லை. டெஸ்ட் தொடரின் போது 100 சதவீதம் தகுதியுடன் நான் இல்லை. எனினும் தற்போது மூட்டு வலியின்றி உள்ளேன் என்றார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments