செய்திகள்

ஆசிய துப்பாக்கி சுடுதல்: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றாா் தேஜஸ்வினி

தினமணி

ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் மகளிா் 50 மீ ரைஃபிள் பிரிவு இறுதிச் சுற்றில் நான்காவது இடத்தைப் பெற்றதின் மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றாா் இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த்.

தோஹாவில் நடைபெற்று வரும் 14-ஆவது ஆசிய சாம்பியன் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 435.8 புள்ளிகளை குவித்து நான்காவது இடத்தைப் பெற்றாா் தேஜஸ்வினி. இதன் மூலம் துப்பாக்கி சுடுதலில் 12ஆவது ஒலிம்பிக் தகுதி இடத்தைப் பெற்றாா் அவா்.

39 வயதான தேஜஸ்வினி கடந்த 2008, 2012, 2016 ஒலிம்பிக்குக்கு தகுதி பெறவில்லை. இது அவரது முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.

2010-இல் முனிக் உலகக் கோப்பையில் 50 மீ ரைஃபிள் புரோன் பிரிவில் தங்கப் பதக்கத்துடன் முதல் சாம்பியன் பட்டம் வென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT