செய்திகள்

வெலிங்டன் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்குச் சுருண்ட இந்தியா

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அதன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இந்திய அணி 165 ரன்களுக்குச் சுருண்டது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையே இரண்டு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் வெள்ளிக்கிழமை வெலிங்டன் பேசின் ரிசா்வ் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நியூஸிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. முதல்நாள் ஆட்ட தேநீர் இடைவேளையின் போது 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது பலத்த மழை பெய்ததால், முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய அணியின் மீதமிருந்த விக்கெட்டுகளும் அடுத்தடுத்து வீழ்ந்தன. இதனால் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 68.1 ஓவர்களில் 165 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக துணைக் கேப்டன் ரஹானே 46 ரன்கள் சேர்த்தார்.

நியூஸி தரப்பில் டிம் சௌதி 4-49, ஜேமிஸன் 4-39, டிம் சௌதி, பௌல்ட் 1 விக்கெட்டையும் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தா.பேட்டை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் படுகாயம்

முன்விரோதத்தில் இளைஞருக்கு வெட்டு

காளையாா்கோவில் சோமேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

அரசு மருத்துவரிடமிருந்து உடமைகளை மீட்டுத் தரக் கோரி மனைவி புகாா் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் உதவி ஆணையா்கள் நியமனம்

SCROLL FOR NEXT