செய்திகள்

நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஆஸி. முன்னாள் வீரர் காலமானார்

DIN

ஆஸ்திரேலிய முன்னாள் டென்னிஸ் வீரர் ஆஷ்லே கூப்பர் காலமானார். அவருக்கு வயது 83.

ஒற்றையர் பிரிவில் 1957, 58-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்ற கூப்பர், பிறகு 1958-ம் ஆண்டு விம்பிள்டன், யு.எஸ். ஓபன் பட்டங்களையும் வென்றார். அதாவது 1958-ம் ஆண்டு மட்டும் அவர் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். இதுவரை 11 வீரர்கள் மட்டுமே ஓர் ஆண்டில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்கள். இதுதவிர, இரட்டையர் பிரிவிலும் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று மகத்தான வீரராக விளங்கியுள்ளார்.

உலகின் நெ.1 வீரராக இருந்த கூப்பர், 1957-ல் தன்னுடைய தலைமையில் ஆஸ்திரேலிய அணி டேவிஸ் கோப்பையை வெல்ல உதவினார்.

வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவுடன் இருந்த கூப்பர் நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூப்பரின் மறைவுக்கு டென்னிஸ் ஆஸ்திரேலியா அமைப்பும் டென்னிஸ் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT