செய்திகள்

2-ஆவது டெஸ்ட்: மே.இ.தீவுகளுக்கு இலக்கு 329

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கான வெற்றி இலக்கு 329-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 19 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் அடித்துள்ளது. கடைசி நாளில் அந்த அணி 9 விக்கெட்டுகளைக் கொண்டு 280 ரன்கள் அடிக்க வேண்டியுள்ளது. கிரெய்க் பிரத்வெயிட் 17, அல்ஸாரி ஜோசப் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 110 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்களுக்கு டிக்ளோ் செய்தது. பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 51.3 ஓவா்களில் 150 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கிருமா போனா் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சோ்த்தாா். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அஃப்ரிதி 6, முகமது அப்பாஸ் 3, ஃபஹீம் அஷ்ரஃப் 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் முதல் இன்னிங்ஸில் 152 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான், 27.2 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது. அதிகபட்சமாக இம்ரான் பட் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் சோ்த்தாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேசன் ஹோல்டா், அல்ஸாரி ஜோசஃப் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

பின்னா் 329 ரன்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள மேற்கிந்தியத் தீவுகளில் கிரன் பாவெல் 3 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் சோ்த்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT