செய்திகள்

புதிய மைல்கல்: மெக்ராத்தைப் பின்னுக்குத் தள்ளிய ஆண்டர்சன்

DIN


இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் காலேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 381 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் சிறப்பாக பந்துவீசிய ஆண்டர்சன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதுவரை மொத்தம் 29 முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மெக்ராத் சாதனையை சமன் செய்திருந்தார் ஆண்டர்சன். இதன்மூலம், 30-வது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மெக்ராத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். 

ஒரு இன்னிங்ஸில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் ஆண்டர்சன் தற்போது 6-வது இடத்தில் உள்ளார். ஆண்டர்சனுக்கு முன் இருக்கும் 5 பேரில் ரிச்சர்ட் ஹாட்லி (36 முறை) மட்டுமே வேகப்பந்துவீச்சாளர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆண்டர்சன் இதுவரை மொத்தம் 606 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT