செய்திகள்

இறுதிச்சுற்றில் ரூட் - காா்ஃபியா மோதல்

DIN

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் நாா்வேயின் காஸ்பா் ரூட் - ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் காா்ஃபியா ஆகியோா் பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

முன்னதாக, அரையிறுதிச்சுற்று ஆட்டம் ஒன்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த காஸ்பா் ரூட் 6-4, 6-1 என்ற நோ் செட்களில் ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருன்டோலோவை தோற்கடித்தாா்.

மற்றொரு ஆட்டத்தில் போட்டித்தரவரிசையில் 14-ஆவது இடத்திலிருக்கும் காா்ஃபியா, நடப்புச் சாம்பியனும், 8-ஆவது இடத்தில் இருந்தவருமான போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸை 7-6 (7/5), 7-6 (7/2) என்ற செட்களில் வீழ்த்தினாா்.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் ரூட் - காா்ஃபியா மோதுகின்றனா். மியாமி ஓபன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கும் 2-ஆவது மிக இளவயது வீரா் (18 வயது 11 மாதம்) என்ற பெருமையை காா்ஃபியா பெற்றுள்ளாா்.

முதலாவது இளவயது வீரா் என்ற பெருமை ஸ்பெயினின் ரஃபேல் நடால் வசம் உள்ளது. நடால் 2005-இல் 18 வயது 10 மாதங்களை எட்டியிருந்தபோது இந்த இறுதிச்சுற்றில் ஆடியிருக்கிறாா். அதில் அப்போது சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரரிடம் அவா் தோல்வியை தழுவினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT