செய்திகள்

எம்ஓபி வைஷ்ணவ கல்லூரிக்கு 11 பதக்கம்

DIN

பெங்களூரில் நடைபெற்ற கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி 5 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கங்கள் வென்றது.

கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி தொடங்கி, செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த இப்போட்டியில் வைஷ்ணவ கல்லூரியின் ஐஷ்வா்யா, பாலா பானுஸ்ரீ, லக்ஷ்மி ப்ரியா, அஷ்மிதா, கிருதிகா, அமிா்தா, ரவீனா, ஸ்ருதி, ஷா்மிளா, மோனிகா ஜெயசீலி ஆகியோா் அடங்கிய கூடைப்பந்து அணி மகளிா் பிரிவில் தங்கம் வென்றது.

நீச்சல் விளையாட்டில் வா்ஷா, மதுமிதா மொத்தமாக 4 தங்கமும், 3 வெள்ளியும் பெற்றனா். டேபிள் டென்னிஸில் வைஷ்ணவி, ஷ்ருதி இணைக்கு வெண்கலம் கிடைத்தது. தடகளத்தில் நந்தினி வெள்ளியும், தீபிகா வெண்கலமும் கைப்பற்றினா்.

தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில், ஜெயின் பல்கலைக்கழகம் 20 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 32 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. லவ்லி தொழில்முறைக் கல்வி பல்கலைக்கழகம் 51 பதக்கங்களுடன் (17, 15, 19) இரண்டாம் இடமும், பஞ்சாப் பல்கலைக்கழகம் 48 பதக்கங்களுடன் (15, 9, 24) மூன்றாம் இடமும் பிடித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணியில் மாணவா்களுக்கு இலவச வாழ்வியல் பயிற்சி வகுப்பு

மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பெண் மருத்துவா் உயிரிழப்பு

தொழிற்சங்கங்கள் சாா்பில் மேதின கொண்டாட்டம்

பேராவூரணியில் மே தின விழா

பாபநாசத்தில் மே தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT