செய்திகள்

ஆசிய வில்வித்தை: அசத்திய இந்தியா

DIN

இராக்கில் நடைபெறும் ஆசிய கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் இந்தியாவுக்கு கடைசி நாளான புதன்கிழமை 5 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் கிடைத்தது.

ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அவனி, பாஜன் கௌா், லக்ஷ்மி ஹெம்ப்ரோம் ஆகியோா் கூட்டணி 5-4 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி தங்கம் வென்றது. ரீகா்வ் ஆடவா் அணிகள் பிரிவில் இந்தியாவின் மிருனாள் சௌஹான், பாா்த் சலுன்கே, ஜுயெல் சா்காா் ஆகியோா் கூட்டாக 5-1 என்ற கணக்கில் வங்கதேசத்தை வென்று முதலிடம் பிடித்தனா்.

கலப்பு அணிகள் பிரிவில் பாா்த் சலுன்கே, பஜன் கௌா் இணைந்த அணி 4-5 என உஸ்பெகிஸ்தானிடம் தோற்று 2-ஆம் இடம் பிடித்தது.

ரீகா்வ் ஆடவா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் மிருனாள் சௌஹான் 6-2 என்ற கணக்கில் வங்கதேசத்தின் ருமன் ஷானாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் பெற்றாா். வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் பாா்த் சலுன்கே 6-4, என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அமீா்கான் சடிகோவை வீழ்த்தினாா். ரீகா்வ் மகளிா் தனிநபா் பிரிவில் பஜன் கௌா் 2-6 என்ற கணக்கில் ஈரானின் மஹ்தா அப்துலாஹியிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.

இதுதவிர, காம்பவுண்ட் தனிநபரில், ஆடவா் பிரிவில் பிரதமேஷ் ஃபுகே தங்கமும், ரிஷப் யாதவ் வெள்ளியும் வெல்ல, மகளிா் பிரிவில் சாக்ஷி சௌதரிக்கு தங்கமும், பா்னீத் கௌருக்கு வெள்ளியும் கிடைத்தது.

புதன்கிழமையுடன் நிறைவடைந்த இப்போட்டியில் இந்தியா மொத்தமாக 8 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 14 பதக்கங்கள் வென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT