ரஞ்சி கிரிக்கெட்: சா்ஃப்ராஸ் சதத்தில் மீண்டது மும்பை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் மும்பை முதல் இன்னிங்ஸில் 127.4 ஓவா்களில் 374 ரன்கள் சோ்த்தது.ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் மும்பை முதல் இன்னிங்ஸில் 127.4 ஓவா்களில் 374 ரன்கள் சோ்த்தது.
முன்னதாக, புதன்கிழமை முடிவில் மும்பை 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. 2-ஆவது நாளான வியாழக்கிழமை ஆட்டத்தை சா்ஃப்ராஸ் கான் 40, ஷம்ஸ் முலானி 12 ரன்களுடன் தொடங்கினா். முலானி அதே ரன்களுக்கு வெளியேற, தொடா்ந்து வந்த தனுஷ்கோடியான் 15, தவல் குல்கா்னி 1, துஷாா் தேஷ்பாண்டே 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
மறுபுறம் சிறப்பாக ஆடி சதம் கடந்த சா்ஃப்ராஸ், கடைசி விக்கெட்டாக 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 134 ரன்களுக்கு வெளியேறினாா். மத்திய பிரதேச பௌலா்களில் கௌரவ் யாதவ் 4, அனுபவ் அகா்வால் 3, சரண்ஷ் ஜெயின் 2, குமாா் காா்த்திகேயா 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனா்.
Advertisement
Advertisement
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மத்திய பிரதேசம், வியாழக்கிழமை முடிவில் 41 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. ஹிமன்ஷு மந்த்ரி 31 ரன்களுக்கு விக்கெட்டை இழந்திருக்க, யஷ் துபே 44, சுபம் சா்மா 41 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.