முகப்பு
செய்திகள்

பெனால்டி கொடுக்காதது ஏன்? இங்கிலாந்துக்கு ஆதரவாக செயல்பட்ட நடுவர்களை விமர்சிக்கும் ரசிகர்கள்!

இங்கிலாந்து - கானா உலகக் கோப்பை ஆட்டத்தில் நடந்த சர்ச்சை குறித்து...

Updated On : 24 ஜூன் 2026, 3:12 pm IST
பந்தை தன்வசப்படுத்தும் முயற்சியில் இங்கிலாந்து (2) - கானா (25) வீரர்கள். - படம்: ஏபி
பகிர்:

உலகக் கோப்பையின் குரூப் எல் பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து - கானா போட்டி சமனில் முடிவடைந்தது. இரு அணிகளுமே ஒரு கோல்கூட அடிகாமல் போட்டியை முடித்தன.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஆதரவாகச் செயல்பட்ட நடுவர்கள் கானா அணிக்கு எதிராகச் செயல்பட்டதாக கால்பந்து ரசிகர்கள் இணையத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அமெரிக்காவின் பாஸ்டன் கால்பந்து திடலில் கானா அணியும் இங்கிலாந்து அணியும் மோதின. இந்தப் போட்டி முதல் பாதியில் 0-0 என இருந்தது.

Advertisement

Advertisement

பின்னர், இந்தப் போட்டியின் இரண்டாம் பாதியில் 79ஆவது நிமிஷத்தில் கானாவின் ஃபார்வேட் பிரின்ஸ் அபு கோல் அடிக்கும் முயற்சியில் பெனால்டி பாக்ஸிற்குள் நுழைய, இங்கிலாந்தின் டிஃபெண்டர் எஜ்ரி கோன்ஸா தனது முழங்காலினால் தடுத்து, கானா வீரரை கீழே விழ வைத்தார்.

பின்னர், இங்கிலாந்து கோல்கீப்பர் பந்தினை வலைக்குள் போகவிடாமல் தடுத்து விட்டார். இந்த நிகழ்வுக்கு நடுவர் பெனால்டி வழங்கவில்லை. விஏஆர் இதில் தலையிடாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உலகக் கோப்பையில் எளிதாக வெல்லுமென கணிக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு கானா அணியினர் தங்களது விடாமுயற்சி மூலம் அதிர்ச்சி அளித்தனர்.

இந்தப் போட்டியில் பெனால்டி கொடுக்கப்பட்டு, கானா 1-0 என வென்றிருக்க வேண்டுமென ரசிகர்கள் கூறிவருகிறார்கள். நடுவர் இங்கிலாந்துக்கு ஆதரவாக நடந்துகொண்டதாக கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

summary

FIFA World Cup Referee Accused Of Bias, No Penalty Call In England vs Ghana Match Stirs Row

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments