1982 போருக்கான பதிலடி..! இங்கிலாந்தை வீழ்த்திய வெற்றிக் களிப்பில் ஆர்ஜென்டீன மக்கள்!
கால்பந்து உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆர்ஜென்டீன மக்களின் கொண்டாட்டம் குறித்து...
கால்பந்து உலகக் கோப்பை அரையிறுதியில் ஆர்ஜென்டீனா இங்கிலாந்தை வீழ்த்தியதால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அதன் தலைநகரில் குவிந்து, வெற்றியைக் கொண்டாடினர். இறுதிப் போட்டியில் வென்றதுபோல அவ்வளவு ஆக்ரோஷமாக கொண்டாட வரலாற்றுக் காரணமும் இருக்கிறது என்கிறார்கள் அந்நாட்டு மக்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனா 85ஆவது நிமிஷத்தில்தான் தனது முதல் கோலை அடித்து 1-1 என சமன்படுத்துகிறது. பின்னர், ஸ்டாப்பேஜ் நேரத்தில் மற்றுமொரு கோல் அடித்து 2-1 என த்ரில் வெற்றி பெற்றது. திடலில் ஆர்ஜென்டீன ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் கூச்சலிட்டனர்.
நடப்பு உலக சாம்பியனான ஆர்ஜென்டீனா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 39 வயதாகும் மெஸ்ஸி 2 அசிஸ்டுகளைச் செய்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் அடிதடி நடந்தது.
Advertisement
Advertisement
இந்த வெற்றிக் களிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆர்ஜென்டீன ரசிகர்கள் அதன் தலைநகரம் பியூனஸ் ஏர்ஸ் ஒபெலிஸ்க் கல் தூபிக்கு அருகில் குவிந்தார்கள். சிலர் கூச்சலிட்டனர், சிலர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். தங்களது உடலில் நீலமும் வெண்மையுமான நாட்டின் வண்ணத்தை வரைந்திருந்தனர்.
சில உடல்வாகான ரசிகர்கள் தங்கள் ஜெர்ஸியைக் கழற்றி சுற்றித் திரிந்தனர். ஆண்கள் மட்டுமில்லாம் பெண்களும் இந்தக் கொண்டாட்டத்தில் இணைந்தனர். டிராஃபிக் விளக்குகள், கொடிகளை ஏந்தி வந்திருந்தனர்.
மிகுந்த மகிழ்ச்சியில் பலரும் அழுதுகொண்டிந்தனர் என ஏபி செய்தி சேகரிப்பாளர் கூறியிருக்கிறார். லௌதாரோ மார்டினெஸ் இரண்டாவது கோல் அடித்ததும் வெற்றிக் கொண்டாட்டம் பற்றிக்கொண்டது.
மரியா பெர்டோ எனப்படும் 40 வயதானவர், “இது வெறுமனே கால்பந்து கிடையாது. எங்களது இதயங்களை உடைத்தவர்களின் நாட்டை வீழ்த்தியுள்ளோம்” என்றார். 1982ல் ஃபாக்லாந்து தீவுகளுக்காக ஆர்ஜென்டீனாவும் பிரிட்டனும் மோதிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அங்கிருந்த மற்றுமொரு பெண், “இறந்துபோன இளம் வீரர்களை நினைத்து என் இதயம் இப்போதும் வலிக்கிறது. இது ஒரு அற்புதம். நான் ஆர்ஜென்டீனா என்பதில் பெருமைக் கொள்கிறேன்” என்றார்.
ஃபாக்லாந்து தீவுக்கான 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் சுமார் 649 ஆர்ஜென்டீன மக்கள் உயிரிழந்தார்கள். இதில் பலர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு தென் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் இருண்ட பக்கம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
முன்னதாக, 1986 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப்போட்டியில் தியாகோ மாரடோனாவின் ஹேண்ட் ஆஃப் காட் - Hand of God (கடவுளின் கை) எனப்படும் கோல் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது நூற்றாண்டின் கோல் எனவும் கூறப்பட்டு வருகிறது.
மெஸ்ஸி முதலும் கடைசியாக இங்கிலாந்து அணியுடன் விளையாடிய இந்தப் போட்டியில் பலரும் அவரை வேண்டுமென்றே ஃபௌல் செய்தார்கள்.
இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஃபாக்லாந்து தீவுக்காரர்கள் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்தவர்கள் என்று பதாகைகளும் வைத்திருந்தனர்.
மதியாஸ் அடோர்னோ, “மெஸ்ஸி இந்த வயதிலும் இப்படி விளையாடியது எனக்கு பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. நாங்கள் அவர்மீது அதிக அழுத்தத்தை அளித்திருக்கிறோம். ஆனால், அவர் எல்லாவற்றையும் எங்களுக்குக் கொடுத்திருக்கிறார்” என்றார்.
கால்பந்து போட்டிகள் வெறுமனே போட்டிகளாக இல்லாமல் அது பல நாடுகளின் உணர்வுகளாகவும் ரத்தத்தில் ஊடுருவி இருக்கிறது என்பதற்கு இந்த ஆர்ஜென்டீன வெற்றிக் கொண்டாட்டம் சான்றாக அமைந்திருக்கிறது.
Tens of thousands of Argentina soccer fans celebrate A response to the 1982 war! Argentina celebrates victory over England!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.