FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கால்பந்து உலகக் கோப்பை: மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீன அணி!

கால்பந்து உலகக் கோப்பைக்கான ஆர்ஜென்டீன அணி குறித்து...

கால்பந்து உலகக் கோப்பைக்கான ஆர்ஜென்டீன அணி. - படம்: எக்ஸ் / ஆர்ஜென்டீனா.
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பைக்கான 26 பேர் கொண்ட ஆர்ஜென்டீன அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லியோனல் ஸ்கலோனி பயிற்சியாளராகவும் கேப்டன் லியோனல் மெஸ்ஸியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா மீண்டும் கோப்பை வெல்லும் முனைப்பில் அணிகளை அறிவித்துள்ளது. பெரிதும் எதிர்பார்த்த ஃபிராங்கோ மஸ்தாந்துவோனோ அணியில் தேர்வாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கால்பந்து உலகக் கோப்பை ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.

Advertisement

Advertisement

முதல்முறையாக இந்த உலகக் கோப்பையில் 48 நாடுகள் பங்கேற்கவிருக்கின்றன. 39 வயதாகும் மெஸ்ஸி ஆறாவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கிறார்.

அறிவிக்கப்பட்ட 26 பேர்களில் 17 பேர் ஏற்கெனவே கடைசி உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மெஸ்ஸிக்கு காயம் ஏற்பட்டிருந்தாலும் அவரை அணியில் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை ஆர்ஜென்டீனா 1978, 1986, 2022 ஆகிய உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. நான்காவது உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் அணிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

குரூப் ஜே பிரிவில் ஆர்ஜென்டீனா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான் அணிகள் பங்கேற்கின்றன. ஆர்ஜென்டீனா தனது முதல் போட்டியில் ஜூன்17ல் அல்ஜீரியாவை எதிர்கொள்கிறது. இதற்கு முன்பாக 2 நட்பு ரீதியான போட்டிகளில் விளையாடுவதும் கவனிக்கத்தக்கது.

கோல்கீப்பர்கள்: எமிலியானோ மார்டினெஸ் (ஆஸ்டன் வில்லா), ஜெரோனிமோ ருல்லி (ஒலிம்பிக் டி மார்சேய்), ஜுவான் முஸ்ஸோ (அத்லெடிகோ டி மாட்ரிட்).

டிஃபென்டர்கள்: கோன்சலோ மான்டியேல் (ரிவர் பிளேட்), நஹுவேல் மோலினா (அட்லெடிகோ டி மாட்ரிட்), லிசான்ட்ரோ மார்டினெஸ் (மான்செஸ்டர் யுனைடெட்), நிக்கோலஸ் ஓட்டமென்டி (பென்ஃபிகா), லியோனார்டோ பலேர்டி (ஒலிம்பிக் டி மார்செய்ல்), கிறிஸ்டியன் ரொமேரோ (டொட்டன்ஹாம்), டிகோலஸ் டாக்ம்பிலியா மதீனா (ஒலிம்பிக் டி மார்சேயில்).

மிட்ஃபீல்டர்கள்: ஜியோவானி லோ செல்சோ (பெடிஸ்), லியான்ட்ரோ பரேடெஸ் (போகா ஜூனியர்), ரோட்ரிகோ டி பால் (இன்டர் மியாமி), எக்ஸீகுயல் பலாசியோஸ் (பேயர் லெவர்குசென்), என்ஸோ பெர்னான்டஸ் (செல்ஷி), அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் (லிவர்பூல்), வாலன்டைன் பார்கோ (ஆல்ஸ் ஸ்ராஸ்போர்க்).

ஃபார்வேடுகள்: லியோனல் மெஸ்ஸி (இன்டர் மியாமி), நிக்கோலஸ் கோன்சலஸ் (அத்லெடிகோ டி மாட்ரிட்), கியுலியானோ சிமியோன் (அத்லெடிகோ டி மாட்ரிட்), லொட்டாரோ மார்டினெஸ் (இன்டர் மிலன்), ஜோஸ் மானுவல் லோபஸ் (பால்மீராஸ்), ஜூலியன் அல்வாரெஸ் (அத்லெடிகோ டி மாட்ரிட்), தியாகோ அல்மாடா (லயன்), நிகோ பாஸ் (கோமா).

summary

Lionel Messi is in Argentina's World Cup squad as coach Scaloni calms injury fears

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments