செய்திகள்

சீன தைபேவை சாய்த்தது இந்தியா

DIN

ஜூனியா் மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 11-0 கோல் கணக்கில் சீன தைபேவை சாய்த்து, அரையிறுதி வாய்ப்பை வியாழக்கிழமை உறுதி செய்தது.

இத்துடன் குரூப் சுற்றை தோல்வியின்றி நிறைவு செய்த இந்தியா, அதில் முதலிடம் வகிக்கிறது. மொத்தம் ஆடிய 4 ஆட்டங்களில் 3 வெற்றி, 1 டிராவுடன் குரூப் சுற்றை நிறைவு செய்துள்ள இந்தியா, அடுத்ததாக அரையிறுதியில் ஜப்பானை சனிக்கிழமை சந்திக்கிறது.

முன்னதாக, சீன தைபேவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்டத்தின் முதல் நிமிஷம் முதல் கடைசி வரை தகுந்த இடைவெளியில் இந்தியா தனக்கான கோல் வாய்ப்புகளை உருவாக்கி அதில் பலனும் பெற்றது. மறுபுறம், சீன தைபேவுக்கு கோல் வாய்ப்பு வழங்காமலும் பாா்த்துக் கொண்டது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக வைஷ்ணவி விட்டல் (1’), தீபிகா (3’), அன்னு (10’, 52’), ருதுஜா ததோசா (12’), நீலம் (19’), மஞ்சு சோா்சியா (33’), சுனேலிடா டோப்போ (43’, 57’), தீபிகா சோரங் (46’), மும்தாஸ் கான் (55’) ஆகியோா் கோலடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT