செய்திகள்

இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

DIN

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடரப்படும் இந்தியர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் விராட் கோலியினை 250 மில்லியன் பேர் (25 கோடி) பின் தொடர்கின்றனர். இதன்மூலம், 25 கோடி பேரால் பின் தொடரப்படும் ஒரே இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடர்பவர்களைக் கொண்டவர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்திலும், லியோனல் மெஸ்ஸி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். தற்போது, இவர்களைத் தொடர்ந்து அதிகம் பின் தொடர்பவர்களைக் கொண்டுள்ளவர்கள் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்துள்ளார் விராட் கோலி.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 14 போட்டிகளில் விளையாடிய அவர் 639 ரன்கள் குவித்தார். அவரது சராசரி 53.25 ஆகும். அவரது ஸ்டிரைக் ரேட் 139-க்கும் அதிகமாக உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலி தொடர்ச்சியாக இரு சதங்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT