இந்தியா-பாகிஸ்தான் போட்டி: மழையால் தாமதம்!
மழையின் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மழையின் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டி மழை காரணமாக நேற்று இந்தியா முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது நிறுத்தப்பட்டது. நேற்றைய ஆட்டத்தில் 24.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை நிற்காததால் ஆட்டம் கூடுதல் நாளான இன்று நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: சந்திரயான்-2 ஆர்பிட்டர் பற்றி இஸ்ரோவின் ஆச்சரிய தகவல்
Advertisement
Advertisement
இந்த நிலையில், மழையின் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியை நடத்துவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது.
மழை நின்றபின் போட்டி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து இன்று தொடங்கும். இந்திய அணியின் விராட் கோலி 8 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.