முகப்பு
செய்திகள்

முதல் டி20: வங்கதேசத்துக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்துள்ளது.

Updated On : 4 மார்ச் 2024, 8:12 pm IST
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்துள்ளது.

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று (மார்ச் 4) தொடங்கியது. சில்ஹட்டில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இலங்கை முதலில் பேட் செய்தது.

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதீரா சமரவிக்கிரம 61* ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து குசால் மெண்டிஸ் 59 ரன்களும், கேப்டன் அசலங்கா 44* ரன்களும் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

Advertisement

Advertisement

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.