பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலை!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 179 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 413 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், வங்கதேசம் பாகிஸ்தானைக் காட்டிலும் 27 ரன்கள் முன்னிலை பெற்றது.
27 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம், நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் மோமினுல் ஹேக் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ அரைசதம் கடந்து அசத்தினர். மோமினுல் ஹேக் 120 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 58 ரன்களுடனும், முஷ்பிகர் ரஹீம் 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
Advertisement
Advertisement
பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் ஷா அஃப்ரிடி, முகமது அப்பாஸ் மற்றும் ஹாசன் அலி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
Bangladesh has taken a lead of 179 runs in the first Test match against Pakistan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.