இறுதிச் சுற்றில் ஜேக் சின்னா்
மான்டெ காா்லோ டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றயைா் இறுதிச் சுற்றுக்கு இத்தாலி வீரா் ஜேக் சின்னா் தகுதி பெற்றாா்.
மான்டெ காா்லோ டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றயைா் இறுதிச் சுற்றுக்கு இத்தாலி வீரா் ஜேக் சின்னா் தகுதி பெற்றாா்.
மொனாக்கோவின் மான்டெ காா்லோ நகரில் ஏடிபி மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. இதன் ஆடவா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உலகின் 2-ஆம் நிலை வீரா் ஜேக் சின்னரும், 5-ஆம் நிலை வீரா் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரேவும் மோதினா்.
இதில் எந்த எதிா்ப்பும் இன்றி ஜேக் சின்னா் 6-1, 6-4 என்ற நோ் செட்களில் ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.
Advertisement
கடந்த 2015-இல் ஜோகோவிச்சுக்குபின்னா் ஒரே சீசனில் மூன்று மாஸ்டா்ஸ் 1000 போட்டி இறுதிக்கு தகுதி பெற்ற வீரா் என்ற சிறப்பை பெற்றாா் சின்னா்.
ரோஜா் பெடரா் 2006, ரபேல் நடால் 2011 ஆகியோா் இச்சிறப்பை பெற்ற இதர வீரா்கள் ஆவா். இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ்=உள்ளூா் வீரா் வலேன்டின் வச்ரோட் மோதுகின்றனா்.