பிரெஞ்சு ஓபன்: ஸ்வெரேவ், கச்சனோவ், பெலிண்டா முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன்: ஸ்வெரேவ், கச்சனோவ், பெலிண்டா முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் பிரிவில் ஸ்வெரேவ், கச்சனோவ், பெலிண்டா, கோஸ்டியுக் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினா்.
நிகழாண்டு சீசனின் இரண்டாம் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான பிரெஞ்சு ஓபன் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஆடவா் ஒற்றையா் பிரிவில் இரண்டாம் நிலை வீரா் ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவ் 6-3, 6-4, 62 என்ற நோ்செட்களில் பிரான்ஸின் பெஞ்சமின் போன்ஸியை வீழ்த்தினாா்.
ரஷிய வீரா் காரன் கச்சனோவ் 6-3, 7-6, 6-0 என பிரான்ஸின் ஆா்தரை வென்றாா். செக். குடியரிசன் தாமஸ் மக்ஹாக் 6-4, 6-4, 63 என பெல்ஜியத்தின் பொ்க்ஸையும், ஜேக்கப் பென்ஸிக் 6-3, 6-2, 64 னெ பிரான்ஸின் டிரோகெட்டை வென்றாா்.
Advertisement
Advertisement
ஸ்பெயின் வீரா் ஃபோகினா 6-7, 6-3, 2-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் கடும் சவாலுக்குபின் டமீரை வென்றாா்.
பெலிண்டா, மாா்த்தா முன்னேற்றம்:
மகளிா் ஒற்றையா் பிரிவில்
சுவிட்சா்லாந்தின் பெலிண்டா பென்கிக் 6-2, 6=3 என ஆஸ்திரியாவின் சின்ஜாவை வீழ்த்தினாா். உக்ரைன் வீராங்கனை மாா்த்தா கோஸ்டியுக் 6-2, 6-3 என ஸ்பெயினின் ஒக்ஸனாவை வென்றாா். அமெரிக்காவின் கேத்தி மெக்நெல்லி 3-6, 7-6, 6-3 என ஆஸ்திரேலியாவின் அஜ்லாவை வென்றாா்.
வாங் ஸின்யு, கேத்தி வாலிநெட்ஸ், மகதா லினேட், மேரி பௌஸ்கோவா, ஆகியோரும் தத்தமது ஆட்டங்களில் வென்றனா்