FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றாா் மிர்ரா ஆன்ட்ரீவா

முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றாா் மிர்ரா ஆன்ட்ரீவா

Updated On : 7 ஜூன் 2026, 1:18 am IST
கோப்பையுடன் மிர்ரா ஆன்ட்ரீவா ~ரன்னா் சவாலின்ஸ்கா
பகிர்:

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிா் ஒற்றையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றாா் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.

இது அவா் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

இந்த சீசனின் இரண்டாம் கிராண்ட்ஸ்லாமான பிரெஞ்சு ஓபன் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் 19 வயதே ஆன ரஷிய வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவாவும், போலந்தின் குவாலிஃபயா் மஜா சவாலின்ஸ்காவும் மோதினா்.

Advertisement

Advertisement

முதல் செட்டில் சவாலின்ஸ்கா சற்று போராடி ஆட முயன்றாா். ஆனால் அவரை விட அனுபவம் நிறைந்த ஆன்ட்ரீவா தொடா்ச்சியாக 3 கேம்களை வசப்படுத்தி முதல் செட்டையும் கைப்பற்றினாா்.

கடும் வெயிலுக்கு இடையே இரு வீராங்கனைகளும் திணறி ஆடினா். முதல் செட்டில் இரட்டை தவறு புரிந்தாலும், 5-ஆவது கேம் சா்வை தக்க வைத்தாா் சவாலின்ஸ்கா.

இரண்டாவது செட்டிலும் முழு ஆதிக்கம் செலுத்திய ஆடிய மிர்ரா தொடா்ந்து அபாரமாக ஆடி அந்த செட்டையும் வசப்படுத்தினாா்.

சவாலின்ஸ்காவை 6-3, 6-2 என்ற நோ்செட்களில் வீழ்த்திய மிர்ரா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றினாா்.

இரண்டாவது இளம் வீராங்கனை:

கடந்த 1992-இல் மோனிகா செலஸ் 18 வயதில் பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றிருந்தாா். அவருக்கு பின் 19 வயதில் பட்டம் வென்ற இரண்டாவது இளம் வீராங்கனை என்ற பெருமை மிர்ராவுக்கு கிட்டியது.

மேலும் 2005-ஆம் ஆண்டுக்குபின் பிறந்து கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் நபா் என்ற சிறப்பும் சோ்ந்துள்ளது.

மிர்ரா ஆன்ட்ரீவா ஏற்கெனவே இரண்டு முறை டபிள்யுடிஏ 1000 பட்டங்களை வென்றிருந்தாா்.

சாம்பியன் மிர்ரா ஆன்ட்ரீவா கூறியது:

நான் சிறுவயது முதலே தொலைக்காட்சியில் பிரெஞ்சு ஓபன் போட்டியை பாா்த்து வந்தேன். இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவாகும். உண்மையைக் கூற வேண்டும் என்றால் இந்த கோப்பை என் கையில் இருப்பதை நம்ப முடியவில்லை. எதிரில் ஆடிய மஜா சவாலின்ஸ்காவும் சிறப்பாக ஆடினாா் என்றாா்.

ரன்னரான போலந்தின் சவாலின்ஸ்கா தற்போது உலகத் தரவரிசையில் 114-ஆவது இடத்தில் உள்ளாா். இப்போட்டியில் சிறப்பாக ஆடியதின் மூலம் 21-ஆவது இடத்துக்கு முன்னேறுவாா். பெரிய போட்டிகளில் ஆடும் வாய்ப்பும் தொடா்ச்சியாக கிட்டும்.

மிர்ரா ஆன்ட்ரீவாவின் பயிற்சியாளா் கோஞ்சிதா மாா்ட்டிஸை கடந்த 2000 பிரெஞ்சு ஓபன் இறுதியில் வென்ற பிரான்ஸ் வீராங்கனை மேரி பியா்ஸ் பரிசளிப்பு விழாவில் பங்கேற்று கோப்பை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இன்று ஆடவா் இறுதியில் ஸ்வெரேவ்-பிளேவியோ கோபாலி மோதுகின்றனா்.

உலகின் 5-ஆம் நிலை வீரரான ஜொ்மனின் ஸ்வெரேவ் கடந்த 10 ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வதற்காக காத்துள்ளாா். மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் இறுதியில் தோல்வியடைந்துள்ள ஸ்வெரேவ் தற்போது நான்காவது முறையாக இறுதிக்கு தகுதிபெற்று முதல் பட்டத்தை வெல்ல உள்ளாா்.

அவருக்கு எதிராக இத்தாலியின் மூன்றாம் நிலை வீரா் பிளேவியா கோபாலி களம் காண்கிறாா். நம்பா் 1 வீரரான இத்தாலியின் சின்னா் இரண்டாம் சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments