முகப்பு
செய்திகள்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு

Updated On : 29 ஏப்ரல் 2026, 5:13 am IST
பகிர்:

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கான இங்கிலாந்து அணி, நேட் சிவர் பிரன்ட் தலைமையில் 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

அந்த அணியே, உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்தியா மற்றும் நியூஸிலாந்துடனான தொடர்களிலும் மோதவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

10}ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 12 நாடுகள் பங்கேற்கின்றன.

Advertisement

Advertisement

இந்நிலையில் அந்தப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள இங்கிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டில்லி கார்டீன் கோல்மேன், இசி வாங், லாரென் ஃபைலர் ஆகியோருக்கு முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதே அணி, இந்தியாவுடனான 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரிலும், ஒரு டெஸ்ட் ஆட்டத்திலும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக இந்திய மகளிர் அணி மே கடைசியில் இங்கிலாந்து செல்கிறது.

இங்கிலாந்து அணி விவரம்: நேட் சிவர் பிரன்ட் (கேப்டன்), லாரென் பெல், ஆலிஸ் கேப்சி, டில்லி கார்டீன் கோல்மேன், சார்லி டீன், சோஃபியா டங்க்லி, சோஃபி எக்லஸ்டன், லாரென் ஃபைலர், டேனி கிப்சன், எமி ஜோன்ஸ், ஃப்ரெயா கெம்ப், ஹீதர் நைட், லின்சே ஸ்மித், இசி வாங், டேனி வியாட் ஹாட்ஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.