முகப்பு
செய்திகள்

மகளிர் டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணியில் ஷப்னிம்

நடப்பாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி, 15 பேருடன் அறிவிக்கப்பட்டது.

Updated On : 13 மே 2026, 3:28 am IST
- Picasa
பகிர்:

நடப்பாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி, 15 பேருடன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

சர்வதேச களத்திலிருந்து விடைபெற்று ஓய்விலிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில், தனது முடிவை திரும்பப் பெற்று இந்த அணியில் இணைந்திருக்கிறார். கேலா ரெனிகே தனது முதல் சீனியர் உலகக் கோப்பை போட்டி வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

2023, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய போட்டிகளில் இறுதி ஆட்டம் வரை வந்த தென்னாப்பிரிக்கா, இந்த முறை சாம்பியனாகும் முனைப்புடன் உள்ளது. குரூப் 1-இல் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தியா, நெதர்லாந்து, வங்கதேச அணிகளுடன் சேர்க்கப்பட்டுள்ள தென்னாப்பிரிக்கா, முதல் ஆட்டத்தில் ஜூன் 13-ஆம் தேதி ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

Advertisement

இந்த டி20 உலகக் கோப்பை போட்டி ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை பிரிட்டனில் நடைபெறவுள்ளது.

அணி விவரம்: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், நாடின் டி கிளெர்க், ஆனிரி டெர்க்சென், ஷப்னிம் இஸ்மாயில், சினோலா ஜாஃப்தா, மாரிஸேன் காப், அயபோங்கா ககா, சுனே லூஸ், கராபோ மிசோ, நோன்குலுலேகோ லாபா, கேலா ரெனிகே, டுமி செகுகுனே, கிளோ டிரையான், டேன் வான் நிகெர்க்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.