முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதி

Updated On : 8 மே 2026, 7:17 am IST
பகிர்:

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2}ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் மகளிர் அணி பிரிவில் இந்தியா இறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது. எப்போதுமே சவாலாக இருக்கும் தென் கொரியாவை வீழ்த்தி, இந்தியா இந்த முன்னேற்றத்தை சந்தித்தது.

தீபிகா குமாரி, அங்கிதா பகத், கும்கும் மோஹோத் ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி, முதல் சுற்றில் 6-2 என உஸ்பெகிஸ்தானை எளிதாகச் சாய்த்தது. பின்னர் காலிறுதியில் 5-4 (28/25) என்ற வகையில் வியத்நாமை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

அதில், 10 முறை ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரிய அணியை சந்தித்தது. எனினும், ஆசிய கோப்பை போட்டிகளுக்குத் தயாராகும் வகையில் தென் கொரியா இரு அறிமுக வீராங்கனைகளை அணியில் சேர்த்திருந்தது. வழக்கமான அனுபவ வீராங்கனைகள் இல்லாதது சற்று கை கொடுக்க, இந்தியா 5-1 என தென் கொரியாவை வீழ்த்தி வெற்றியைத் தழுவியது.

Advertisement

Advertisement

அடுத்ததாக இறுதியில் சீனாவை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது இந்தியா. இதிலேயே ஆடவர் பிரிவில், தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா, யஷ்தீப் போகே ஆகியோர் அடங்கிய இந்திய அணி, முதல் சுற்று பை பெற்று, 2-ஆவது சுற்றிலேயே 2-6 என வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவியது.

அதேபோல் கலப்பு அணிகள் பிரிவிலும் தீரஜ் பொம்மதேவரா, அங்கிதா பகத் ஜோடி முதல் சுற்று பை பெற்று, 2-ஆவது சுற்றில் பிரேஸிலிடம் 4-5 (19/19) என தோல்வி கண்டது. இதனிடையே, காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவிலும், ஓஜாஸ் பிரவின் தியோடேல், அதிதி சுவாமி கூட்டணி 156-157 என அமெரிக்க ஜோடியிடம் காலிறுதியில் தோல்வியுற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments