முகப்பு
செய்திகள்

உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் அணி வெற்றி

Updated On : 29 ஏப்ரல், 2026 at 5:07 AM
பகிர்:

உலக அணிகள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என துனிசியாவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

இந்த டையில், முதலில் மனுஷ் ஷா 11-5, 9-11, 11-3, 11-5 என, எசித் வாசிமை வீழ்த்தினார். தொடர்ந்து மானவ் தக்கர் 11-3, 11-3, 11-3 என்ற நேர் செட்களில் யூசஃப் அய்ட்லியை தோற்கடித்தார். கடைசி மோதலில் ஹர்மீத் தேசாய் 11-5, 11-4, 11-8 என்ற வகையில் அபுபக்கர் பெüராûஸ சாய்த்தார். இந்த வெற்றியை அடுத்து இந்தியா, "1பி' பிரிவில் குரூப் 7-இல் 2-ஆவது இடத்தில் உள்ளது. இப்போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் உகாண்டாவை எதிர்கொள்ளவிருந்தது. ஆனால் ஆட்டத்துக்காக உகாண்டா ரிப்போர்ட் செய்யாததை அடுத்து, "வாக் ஓவர்' அளிக்கப்பட்டு இந்தியா 3}0 என வென்றதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.