5 மணி நேரங்கள் 15 நிமிஷங்கள்... விம்பிள்டன் காலிறுதியில் புதிய வரலாறு படைத்த ஜோகோவிச்!
விம்பிள்டன் காலிறுதியில் வரலாறு படைத்த 39 வயதான ஜோகோவிச் குறித்து...
விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் (39 வயது) 5 மணி நேரம் 15 நிமிஷங்கள் விளையாடி வென்று, புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.
முன்னதாக, விம்பிள்டன் காலிறுதியில் 2018ல் நோவக் ஜோகோவிச் - கெய் நிஷிகோரியை 2 மணி நேரம் 35 நிமிஷங்களில் வீழ்த்தியிருந்தார். தற்போது, இந்த சாதனை அவராலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.
கனடாவைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் ஆகர்-அலியாசிமும் (25 வயது) செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் (39 வயது) விம்பிள்டனில் காலிறுதியில் மோதினார்கள். இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 10.05 மணிக்குத் தொடங்கி அதிகாலை 3.24 மணிக்கு முடிவடைந்தது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டி விம்பிள்டன் காலிறுதி வரலாற்றிலேயே நீண்ட நேரம் விளையாடப்பட்டதாக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் ஜோகோவிச் 7-6 (10), 3-6, 6-3, 6-7 (4), 7-6 (4) என்ற செட்களில் வீழ்த்தி அசத்தினார்.
ஏழு முறை விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் தனது 39 வயதில் 5 மணி நேரம் போராடி இந்த வெற்றியைப் பெற்றுள்ளது டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டிதான் ஜோகோவிச் டென்னிஸ் வாழ்க்கையிலேயே மிகவும் நீண்ட போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் சின்னருடன் மோதவிருக்கிறார்.
Djokovic outlasts Auger-Aliassime after more than 5 hours to reach Wimbledon semifinals at age 39
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.