உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது கொலம்பியா..! லூயிஸ் டயஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு!
கால்பந்து உலகக் கோப்பையின் முதல் போட்டியில் வென்ற கொலம்பியா குறித்து...
கால்பந்து உலகக் கோப்பையின் தனது முதல் போட்டியில் விளையாடிய கொலம்பியா 3-1 என உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது.
குரூப் கே பிரிவில் இடம்பெற்றுள்ள உஸ்பெகிஸ்தான் - கொலம்பியா அணிகள் மெக்சிகோ சிட்டி திடலில் மோதின. இந்தப் போட்டியைப் பார்க்க 80,824 பேர் பங்கேற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்தப் போட்டியில் 40ஆவது நிமிஷத்தில் கொலம்பியாவின் டேனியல் முனோஸ் தனது முதல் உலகக் கோப்பையின் கோல் அடித்தார். பின்னர், இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் உஸ்பெகின்ஸ்தானின் அபோஸ்பெக் ஃபைசுல்லாயேவ் 60ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார்.
Advertisement
Advertisement
நட்சத்திர வீரரும் அறிமுக உலகக் கோப்பையில் விளையாடுபவரான லூயிஸ் டயஸ் 65ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 2-1 என முன்னிலை வகிக்க உதவினார்.
அடுத்ததாக, ஸ்டாப்பேஜ் நேரத்தில் 90+9ஆவது நிமிஷத்தில் கொலம்பிய ஜாமிடோன் காம்பஸ் கோல் அடித்து 3-1 என்ற அசத்தல் வெற்றி பெற உதவினார். லூயிஸ் டயஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தேர்வாக ஃபிஃபா தரவரிசையில் 13-ஆவது இடத்தில் இருக்கும் கொலம்பியா, 50-ஆவது இடத்தில் இருக்கும் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது பலரும் எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது.
கொலம்பியா 2014ல் அதிகபட்சமாக காலிறுதி வரை முன்னேறியிருந்தது. உஸ்பெகிஸ்தான் ஆசிய தகுதிச் சுற்றில் இரானுக்குப் பிறகு இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது.