முகப்பு
செய்திகள்

2014-க்குப் பிறகு முதல் வெற்றி பெற்ற அல்ஜீரியா! ஜோர்டானை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது!

அல்ஜீரியா - ஜோர்டான் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 2 - 1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியா அணி வெற்றிபெற்றது.

Updated On : 23 ஜூன் 2026, 3:08 pm IST
ஜோர்டானின் அலி அல்வான் மற்றும் யாசன் அல்அரப் ஆகியோரிடமிருந்து பந்தைக் கைப்பற்றப் போராடும் அல்ஜீரியாவின் ஃபாரெஸ் சாய்பி. - AP
பகிர்:

அல்ஜீரியா - ஜோர்டான் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் 2 - 1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியா அணி வெற்றிபெற்றது.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அல்ஜீரியா - ஜோர்டான் அணிகளுக்கான ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

ஜோர்டான் அணியின் நிசார் அல் ரஷ்தான் முதல் பாதியில் அடித்த கோல் மூலம் அவர்கள் முன்னிலை பெற்றனர். ஆனால், இரண்டாம் பாதியில் அல்ஜீரியாவின் ஆதிக்கத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.

Advertisement

Advertisement

அல்ஜீரியா அணிக்கு இரண்டாம் பாதியில் மாற்று வீரராகக் களமிறங்கிய நதிர் பென்பௌலி ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் கார்னர் கிக் ஒன்றை தலையால் முட்டி கோலாக்கினார். அதனைத் தொடர்ந்து, 82-வது நிமிடத்தில் அமின் குரி அடித்த கோல் மூலம் கடைசி நேரத்தில் ஆட்டத்தைக் கைப்பற்றியது அல்ஜீரியா அணி. இதன்மூலம், 2014 ஆம் ஆண்டுக்குப் பின் உலகக் கோப்பைப் போட்டியில் தனது முதல் வெற்றிட்யை அல்ஜீரியா பதிவு செய்தது.

மேலும், நாக் - அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பும் அல்ஜீரியா அணிக்கு வலுவாகியுள்ளது. ஒரு போட்டியில் முதல் கோலை எதிரணி அடித்த பின்னர் அல்ஜீரியா வெற்றி பெறும் முதல் போட்டி இதுவே.

இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்த அல்ஜீரியா, அதிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளது. வரும் சனியன்று நடைபெறவிருக்கும் ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் வென்றால், ஜே பிரிவில் 2-ம் இடம்பிடித்து நாக்- அவுட் சுற்றுக்கு அல்ஜீரியா தகுதிபெறும்.

ஜோர்டான் அணி தனது 2-வது தோல்வியுடன் நாக்-அவுட் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

summary

Algeria defeated Jordan 2–1 in the match played between the two teams.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments