முகப்பு
செய்திகள்

100-வது போட்டியில் 2 கோல்கள் அடித்த எம்பாப்பே! இராக்கை வீழ்த்திய பிரான்ஸ்!

பிரான்ஸ் - இராக் இடையே நடைபெற்ற போட்டியில் 3 - 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றிபெற்றது.

Updated On : 23 ஜூன் 2026, 1:45 pm IST
கிலியன் எம்பாப்பே - AP
பகிர்:

பிரான்ஸ் - இராக் இடையே நடைபெற்ற போட்டியில் 3 - 0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றிபெற்றது.

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் - இராக் இடையேயான போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. ஐ பிரிவில் உள்ள இந்த அணிகள் விளையாடும் போட்டி மழை காரணமாக 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

ஆட்டம் தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி, 14-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தது. மைக்கேல் ஓலிஸ் அடித்த துல்லியமான கிராஸை, கவனமாக கீழ் மூலையில் அடித்து கோலாக்கினார் கிலியன் எம்பாப்பே. மேலும், இராக்கின் தாக்குதலைக் கட்டுப்படுத்தி முதல் பாதி ஆட்டம் முழுக்க பந்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

Advertisement

Advertisement

இரண்டாம் பாதியிலும் தங்களது ஆதிக்கத்தை பிரான்ஸ் தொடர்ந்தது. 54-வது நிமிடத்தில் விங்கில் முன்னேறிச் சென்ற உஸ்மான் டெம்பலே பந்தை எம்பாப்பேவுக்குப் பின்னோக்கித் தள்ள, அவர் அதனைத் துல்லியமாக கோல் அடித்தார்.

66-வது நிமிடத்தில் தனது வெற்றியை பிரான்ஸ் உறுதிசெய்தது. ஒலீஸ் அடித்த பந்தை டெம்பேலே கோலாக்கி அணியின் 3-வது கோலை பதிவு செய்தார். சர்வதேச போட்டிகளில் டெம்பேலே அடித்த முதல் கோல் இது.

இதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்று 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. பிரான்ஸ் அணிக்கு இன்னும் ஒரு குரூப் போட்டி மீதமுள்ள நிலையில், நாக்-அவுட் சுற்றுக்கு அவர்கள் முன்னேறுவது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. இராக் புள்ளிகள் எதுவும் எடுக்காமல் ஐ பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்தப் போட்டியின் மூலம், தனது 100-வது சர்வதேச போட்டியில் 2 கோல்களை எம்பாப்பே அடித்துள்ளார் . அதுமட்டுமின்றி, இந்த இரு கோல்களுடன் சேர்த்து, உலகக் கோப்பைப் போட்டிகளில் 16 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்த சாதனையில் 2-வது இடத்தை ஜெர்மனியின் மிரோஸ்லாவ் க்ளோஸ் உடன் பகிர்ந்துள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற மற்றொரு போட்டியில் இரு கோல்கள் அடித்த அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக கோல் அடித்த சாதனையை கைப்பற்றி,18 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். எம்பாப்பே இந்தத் தொடரில் மெஸ்ஸிக்கு இணையாக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

summary

Mbappé scores two goals in his 100th match! France defeats Iraq!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments