சாம்பியன்ஸ் லீக்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆர்செனல்!
சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் வென்ற ஆர்செனல் அணி குறித்து...
சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் வென்ற ஆர்செனல் அணி 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
லண்டன் எமிரேட் கால்பந்து திடலில் நடைபெற்ற இரண்டாம் கட்ட அரையிறுதிப் போட்டியில் ஆர்செனல் அணி அத்லெடிகோ மாட்ரிட் அணியை1-0 என விழ்த்தியது.
இந்தப் போட்டியில் 44ஆவது நிமிஷத்தில் ஆர்செனல் அணியில் நட்சத்திர வீரர் புகாயோ சகா கோல் அடித்தார். இரண்டாம் பாதியில் அத்லெடிகோ எவ்வளவோ முயன்றும் கோல் அடிக்கவில்லை. முதல்கட்ட ஆட்டத்தில் 1-1 என சமநிலையில் முடிந்திருந்தது.
Advertisement
Advertisement
இதனால், ஒட்டுமொத்தமாக 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்செனல் அணி அத்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. இந்த சீசனில் எதிலுமே கோப்பை வெல்லாமல் அத்லெடிகோ வெளியேறியிருக்கிறது.
ஆர்செனல் அணி 2006 சீசனில் பார்சிலோனாவுடன் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றிருந்தது. தற்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்செனல் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி - பெயர்ன் மியூனிக் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி ஆர்செனல் உடன் இறுதிப் போட்டியில் மோதவிருக்கிறது.
பிரீமியர் லீக்கிலும் ஆர்செனல் அணி கோப்பை வெல்லும் நிலையில் இருப்பதால் இன்னும் சில வாரங்கள் அந்த அணிக்கு மிக முக்கியமான நாள்களாக இருக்கின்றன. அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
Arsenal reaches its first Champions League final in 20 years as Saka's goal seals win over Atletico
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.