முகப்பு
தற்போதைய செய்திகள்

முட்டை விலை மேலும் 25 காசுகள் குறைந்தது: கறிக்கோழி, முட்டைக் கோழி விலையும் சரிவு 

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 25 காசுகள் சரிந்து ரூ.4.60-ஆக சனிக்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி, முட்டைக் கோழி விலையும் கிடுகிடுவென சரிந்து வருகிறது.  

Updated On : 9 ஜனவரி 2021, 8:50 am IST
முட்டைக் கோழி பண்ணை
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 25 காசுகள் சரிந்து ரூ.4.60-ஆக சனிக்கிழமை நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி, முட்டைக் கோழி விலையும் கிடுகிடுவென சரிந்து வருகிறது.  

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. 

இதில், பறவைக் காய்ச்சல் பரவலால் மக்களிடையே முட்டை நுகர்வு சற்று குறைந்துள்ளதாக தெரிகிறது. 

Advertisement

Advertisement

அதேபோல் மற்றமண்டலங்களிலும் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறையும் வரையில் முட்டை விலையில் மாற்றம் செய்யப்பட்டு வரலாம் என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதனைதொடர்ந்து மேலும் 25 காசுகளை குறைத்து முட்டை பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த மூன்று நாளில் முட்டை விலை 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. 

பண்ணையாளர்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் பறவைக் காய்ச்சல் அச்சத்தால் கோழி விற்பனை மந்தமடைந்துள்ளால் கறிக்கோழி விலையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து ரூ.92-இல் இருந்து 20 குறைத்து ரூ.72-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கேரளம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பறவைக் காய்ச்சல் பாதிப்பால் அங்கு அதிகப்படியாக விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்த முட்டைக் கோழி விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோழிகளை தேக்கி வைக்காமல் விரைந்து அனுப்பும் வகையில் கிலோ ரூ.49-ஆக நிர்ணயிக்கப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments